நியாய விலைக்கடைகளில் தரமான அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றிக் கிடைக்க வேண்டும், குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்குக் காலதாமதமின்றி குடும்ப அட்டைகள் கிடைத்திட நடவடிக்கை என்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின்செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
பொதுமக்களின் நலனுக்காகக் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர்பாதுகாப்புத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களான நியாயவிலைக்கடைகள், குடும்ப அட்டைகள் வழங்குதல், உணவுப் பொருட்கள்விநியோகம், சிறப்பு பொது விநியோகத்திட்டம், நியாய விலைக்கடைகளைக் கணினிமயமாக்கல், கைவிரல் ரேகைப்பதிவு, குடும்ப அட்டைகள் மாற்றம், பல்பொருள்அங்காடிகளில் தரமான பொருட்களை வழங்குதல், கொரோனா காலத்தில் அரசின்நலத்திட்டங்களான உணவுப்பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகையினைப் பொதுமக்களுக்கு வழங்குதல் மற்றும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள், நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்தும்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில்இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்பொதுமக்களுக்கு நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றிக் கிடைத்திடவும், பொருட்களின் தரத்தினை உறுதி செய்திடவும், குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்குக் காலதாமதமின்றி குடும்ப அட்டைகள் கிடைத்திட நடவடிக்கை எடுத்திடவும், கோவிட் பெருந்தொற்று காலத்தில்கடனுதவி கோரும் சுயஉதவிக் குழுக்கள், சிறு வணிகர்கள், மாற்றுத்திறனாளிகள்,மகளிர் தொழில்முனைவோர் போன்றவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட கூட்டுறவுசங்கங்கள் வாயிலாகத் தகுதியானவர்களுக்கு கடன் வழங்கிட வேண்டும் என்றும்அறிவுறுத்தினார்.
பொது விநியோகத்திட்டத்தை முழுவதும் கணினிமயமாக்குதல், பல துறைகள்மூலம் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளை ஒரே துறையின்கீழ் கொண்டு வருதல், வாடகைக்கட்டிடங்களில் செயல்படும் நியாய விலைக்கடைகளுக்குச் சொந்தகட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், பெண்பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், சேமிப்புக் கிடங்குகளை மேம்படுத்துதல், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நெல் ஆகியவற்றை ஓர் இடத்தில்இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டுசெல்லப்படுவதை இணைய வழியில் கண்காணித்தல், எடைக்குறைவு போன்றவற்றைக் களைதல், தரமான சேவையினைப்பொதுமக்களுக்கு வழங்குதல் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்தும் முதலமைச்சர் அவர்கள் ஆலோசனை வழங்கினார்.
தமிழக மக்களுக்குக் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயக் கடன்,நகைக்கடன் வழங்குதல், மானிய விலையில் உரம் மற்றும் விவசாய இடுபொருட்கள்வழங்குதல் போன்றவற்றை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்தும் இந்தஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது .இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ. பெரியசாமி ,உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.